கள்ளக்குறிச்சி, அக். 25- கள்ளக்குறிச்சி பகுதியில் மர்மக் காய்ச்சல் பரவி வருவ தால் இப்பகுதி அரசு மருத்து வமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் குவிந்து வருகின்றனர். மேலும் 25 ஆம் தேதி முதல் தங்களது நியாயமான கோரிக்கை களை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு படுவதால் மருத்துவப்பணி பாதிக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு மற்றும் அவ சர சிகிச்சைப் பணி தவிர பிற பணிகளில் ஈடுபடாமல் அனைத்து மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பரவி வருகின்ற டெங்கு காய்ச்சல் உயிர் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமான நோயாளிகள் அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நிலை அதிக ரித்து வருகிறது. சில தினங்க ளுக்கு முன்பு கள்ளக்குறிச்சி அருகே உள்ள மோகூர் கிரா மத்தில் ஏராளமானோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப் பட்ட நிலையில் 60 வய தைத் தாண்டிய 4 க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்துள்ளனர். இளம் வயதுடைய பல ருக்கு வேகமாக காய்ச்சல் பரவி கும்பல் கும்பலாக ஆட்டோவில் ஏறிச்சென்று கள்ளக்குறிச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இக்கிராமத்தில் அரசின் நடமாடும் மருத்து வக் குழுவினர் தீவிர சிகிச்சை யில் ஈடுபட்டனர். தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் 20 படுக்கையுடன் கூடிய டெங்கு தடுப்பு சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது. அதில் முழுமையாக நோயா ளிகள் கொசு வலைகளால் மூடப்பட்டு கவனிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டாலும் தங்களது சமூக பொறுப்புணர்வை உணர்ந்து இங்கு மருத்துவமனை உள்ளே இருந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதைத்தாண்டி மாவட்டம் முழுவதும் அரசு ஆரம்ப சுகா தார நிலையங்கள் தாலுகா மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் அரசால் மர்மக் காய்ச்சல் எனக் கூறப் படும் டெங்கு உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் போதிய வசதி இன்றி சிகிச்சை பெற்று வருகின்றனர்.