விழுப்புரம், ஜூலை 23- ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாய சங்கங்களின் விழுப்புரம் மாவட்டத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் விவசாய சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.டி.முருகன், தவிச ஆர்.கலியமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், மாநில துணைச் செயலாளர் த. இந்திரஜித், மாநில துணைத் தலைவர் ஏவி.ஸ்டாலின் மணி, த.ஒ.வி.எ.தொ மாநில பொதுச் செயலாளர் ஏவி.சரவணன், ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர்கள் பி.சிவராமன், எம் ஐ.சகாப்புதின், மாவட்ட பொருளாளர்கள் பி.செந்தில்ரராஜன், ஆர்.இராமமூர்த்தி,விதொச மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுணன், மாவட்டச் செயலாளர் கே.சுந்தரமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பதாக கூறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க பொருளாளர் எஸ்.தட்சணாமூர்த்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வி.சுப்புராயன், திமுக தீர்மானக் குழு உறுப்பினர் இள.புகழேந்தி, மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு, காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய உறுப்பினர் வழக்கறிஞர் ஏ.எஸ்.சந்திரசேகரன், நகர தலைவர் கோபால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் முல்லைவேந்தன், பால அறவாழி, திருமார்பன், பசுமைவளவன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெ.ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் துரை, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆனந்த், திரவிடர் கழக மாநில பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகர், குடியிருப் போர் நல சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.மருதவாணன், ஓய்வு பெற்றோர் அமைப்பின் தலைவர் டி.புருஷோத்தமன், பல்வேறு விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் விஜயகுமார், இளங்கீரன், கண்ணன், அருள், பொதுநல அமைப்பின் வென்புறாகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.