tamilnadu

img

ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு புதியகட்டிடம் அமைக்க சிபிஎம் கோரிக்கை

உளுந்தூர்பேட்டை. டிச, 12- திருநாவலூரில் அமைக்கப் பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு விரிவடைந்த இடமும், போதிய கட்டிடங்களும் அமைத்திட வேண்டுமெனவும் பல்வேறு கிராமங்களில் நிலவும் மக்களுக்கான பொதுகுறைபாடுகளை போக்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநாவலூர் ஊராட்சி ஒன்றி யத்தில் மக்களின் வாழ்வாதா ரத்திற்கு அடிப்படையானது விவசா யம். இப்பகுதியில் பல்வேறு வகை யான தானியங்கள் விளைவிக்கப்  பட்டு உளுந்தூர்பேட்டை, விழுப்பு ரம், பண்ருட்டி உள்ளிட்ட மார்க்கெட்  கமிட்டிக்கு எடுத்துச் செல்வது வழக்கம். சுமார் 20 கிலோ மீட்டர்  தூரத்திற்கு விளைந்த பொருட்கள் மாட்டு வண்டிகளில் ஏற்றிச் செல் லப்படும் நிலையில்; விவசாயிகளின் சிரமத்தை போக்கிட திருநாவலூரில் வேளாண் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடம் அமைக்க வேண்டுமென  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு தமிழக அரசு திருநாவ லூரில் வேளாண் ஒழுங்குமுறை விற்  பனைக் கூடத்தை அமைத்தது. ஆனால் 2000ஆம்ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சமத்து வபுரத்தில் அமைந்திருக்கும் சமு தாயக் கூடத்தில் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடம் அமைக்கப்பட்டு தற்  போது வரை செயல்பட்டு வருகிறது. இதற்கான விரிவடைந்த இடமும், நிரந்தர கட்டிடமும் இதுவரை கட்டப்  படாததால் குறுகிய இடத்தில் விவ சாயிகள் கொண்டுவரும் பொருட் களை அந்தந்த பருவ காலத்தில் வைக்க முடியாமல் அவதி அடை கின்றனர்.  தற்போது தை மாதத்தில் நெல்  அறுவடை துவங்க இருப்பதால்  கூடுதல் சிரமத்தை அனுபவிக்கக் கூடிய நிலையில் உடனடியாக திரு நாவலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு விரிவடைந்த கட்டிட வசதி ஏற்படுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட துவக்க விழாவில் கிழக்கு  மருதூர் கிராமத்தின் அருகே கெடி லம் ஆற்றில் 5.5கோடி ரூபாய் மதிப்  பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும், கள்ளக்குறிச்சி அருகே நரியன் ஓடை யில் 2 கோடியே 35 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்  படும் என முதல்வர் அறி வித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தொடர் போராட்டங்களின் விளை வாக இத்திட்டங்கள் அறிவிக்கப் பட்டதை வரவேற்கும் அதே வேளை யில் முதல்வர் ஜெயலலிதாவால் சட்ட மன்றத்தில் 110 விதியின் கீழ் அறி விக்கப்பட்ட கெடிலம் ஆற்றில் உடை யானந்தல் கிராமத்திலிருந்து சேந்த நாடு சென்றிட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற வாக்குறுதி நிறை வேற்ற வேண்டும் என இம்மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.  இதேபோல திருநாவலூர் ஒன்றி யத்திற்குட்பட்ட சேந்தநாடு, வாணாம்பட்டு, கல்லமேடு, தொப்பை யான்குளம், கள்ளக்குறிச்சி, கொக் காம்பாளையம், நல்லாளகுப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தனித்தனி யாக கோரிக்கை மனு அளிக்கப் பட்டுள்ளது மாநிலக்குழு உறுப்பினர் ஜி. ஆனந்தன், கிழக்கு ஒன்றியச் செய லாளர் ஜெ.ஜெயக்குமார், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் கே.ஆறு முகம், ஏ.எஸ்.குமார், கிளைச் செய லாளர்கள் ஏழுமலை, பழனிவேல், செல்வராஜ், ரவி, கிருஷ்ணன், விஜய ராமன், குமார், முருகன் உள்ளிட் டோர் உடனிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஒன்றிய மேலாளர்  நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.