districts

img

ஆபத்தான நிலையில் பள்ளிக் கட்டடம் புதிய கட்டடம் கட்ட சிபிஎம் கோரிக்கை

தஞ்சாவூர், நவ.3-  பேராவூரணி அருகே ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள் ளது.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், மணக்காடு ஊராட்சி பாங்கி ராங்கொல்லை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 28 மாணவ, மாண விகள் பயின்று வருகின்றனர்.  பல ஆண்டுகளுக்கு முன்பு  கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம் தற்போது கடுமையாக சேதமடைந்துள்ளது. ஆங்காங்கே சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, கூரை கம்பி பிடிமானத்தில்  உள்ளது. பல இடங்களில் சுவரில் விரி சல் ஏற்பட்டுள்ளது. மேலும், வகுப்பு கள் நடக்கும் போது அடிக்கடி சிமெண்ட்  காரைகள் பெயர்ந்து விழுவதும், பின்  னர் சிமெண்ட் வைத்துப் பூசுவதும் தொடர் கதையாக உள்ளது.  பள்ளி கட்டடத்தில் சிமெண்ட் கிராதி வடிவில் ஜன்னல் அமைக்கப்பட்டுள்ன னது. இதனால், மழை நேரத்தில்  வகுப்புக்குள் மழைத் தண்ணீர் தெறித்து விழுகிறது. மின் தடை ஏற்  பட்டால் வகுப்புகள் நடத்த முடியாத  சூழல் உள்ளது. மேலும், பள்ளிகளில் சிமெண்ட் கிராதி ஜன்னல் அமைக்கக் கூடாது என விதி இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இதுகுறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டும் கிராம சபை கூட்டத்தில் மூன்று முறை மனு  அளித்தும் இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.  எனவே ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்டித்  தர வேண்டும், போதிய ஆசிரியர் களை நியமிக்க வேண்டும் என பொது மக்கள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வழக்குரை ஞர் வி.கருப்பையா, ஒன்றியக் குழு  உறுப்பினர் சேகர், ஆர்.கே.ராஜேந்தி ரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.