தருமபுரி, பிப்.21- தருமபுரி மாவட்டத்தில் ஊட்டச் சத்து குறைபாடுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்வுகள் நடை பெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் சமூக பாது காப்புத்துறை, மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு மற்றும் ஒருங் கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் போஷன் அபியான் திட்டம் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுக் கான மாவட்ட அளவிலான ஒருங் கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, தருமபுரி மாவட்டத்தில் பாலியல் வன் கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறு வாழ்வு அளித்திட வேண்டும். குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு மீண்டும் கல்வி அளித்து மறுவாழ்வு ஏற்படுத்திட வேண்டும். குழந்தை திருமணத்தால் ஏற் படும் பாதிப்புகள் குறித்து எடுத்து ரைத்தார்.
மேலும் பிறப்பு, இறப்பு விகிதாச் சாரம் கணக்கெடுத்து இறப்பிற்கான காரணத்தை கண்டறிந்து அவற் றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆரம்ப சுகா தார நிலையத்தின் மூலம் ஆண், பெண் குழந்தைகள் விகிதாச் சாரம் அறிந்து பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறைகளையும் ஒருங்கிணைத்து ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு வருகிற மார்ச் 8 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு போஷன் அபியான் குறித்த ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறுகிறது. மேலும் போஷன் பக்வாடா குறித்து செயல் திட்டம் வகுக்கப் பட்டு அனைத்துத்துறைகளையும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல் படுத்தப்படும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலர் ஆ.சிவகாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் நாக லட்சுமி, உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ராஜிவ்காந்தி, குழந்தைகள் நலக்குழு தலைவர் சரவணன் மற்றும் உறுப்பினர்கள், இளஞ்சிறார் நீதிக்குழும உறுப்பி னர்கள் ஆகியோர் கலந்துகொண்ட னர்.