tamilnadu

img

சீனாவின் வுஹான் நகரில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆய்வு

வுஹான் 
சீனாவின் மத்திய பகுதி மாகாணமான ஹுபேயில் உள்ள வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவியது. தொடக்கத்தில் மந்தமான வேகத்தில் பரவிய கொரோனா வைரஸ் புத்தாண்டு முதல் புதிய அவதாரம் எடுத்து கடும் சேதாரத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அருகில் நகரங்களுக்கும் பரவிய இந்த கொரோனா வைரஸால் தற்போதைய நிலவரப்படி சீனாவில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சுகாதாரத்துறை உயரதிகாரிகளுடன்  வுஹான் நகரில் செவ்வாயன்று சுற்றுப்பயணம் செய்து அங்கு நடைபெற்று வரும் மருத்துவ சிகிச்சை மற்றும் போர்க்கால தடுப்பு பணிகளை பார்வையிட்டார். மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இரவு, பகல் பாராமல் அரும்பணியாற்றி வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், ராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் பலன் எதிர்பாரா தன்னார்வலர்கள் ஆகியோருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தனது பாராட்டுகளையும், நன்றியையும் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.