சீனாவின் உவானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான குத்துச்சண்டை போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானில், வரும் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. சீனாவின் உவான் நகரில், ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான குத்துச்சண்டை போட்டி வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்நிலையில், கடந்த டிசம்பரில் இருந்து சீனாவில் கரோனா வைரஸ் பரவி வருகின்றது. இந்த கொடிய வைரஸ் பாதிப்பு காரணமாக உவான் நகரில் 9 பேர் பலியாகி உள்ளனர். இந்த சூழலில், உவான் நகரில் நடக்கவிருந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான குத்துச் சண்டை போட்டியை ரத்து செய்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.