tamilnadu

விவசாயப் பணிகளுக்கு 100 நாள் தொழிலாளர்களை பயன்படுத்துக

வேலூர் ஆக. 17- ஆட்கள் பற்றாக்குறையைத் தவிர்க்க  காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்து வதை போல் வேலூர் மாவட்டத்திலும் விவ சாயப் பணிகளுக்கு நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தலை மையில் வேலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று விவசாயிகள் பேசுகையில், காஞ்சிபுரத்தில் நிலக்கடலை  களையெடுப்பு, விவசாயப் பணிகளுக்கு நூறு  நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களை பயன்படுத்துகின்றனர். வேலூர் மாவட்டத்தில்  தற்போது களை பறிக்க ஆட்கள் கிடைக்காத சூழல் நிலவுகிறது. எனவே காஞ்சிபுரத்தைப் போல் வேலூர் மாவட்டத்திலும் நூறு நாள் வேலைத்திட்டத் தொழிலாளர்களைப் பயன்படுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாகவே வேலூர் மாவட்டம் வறட்சியில் உள்ளது. இதற்கு தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றி, விவ சாயத்தைப் பாதுகாக்க வேண்டும். அடங்கல்  உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அதைச்  சரிசெய்ய வேண்டும். திண்டிவனம்-நகரி ரயில்  திட்டத்துக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. இத னால், மீதி உள்ள நிலத்தையும் எங்களால் விற்க முடியவில்லை. பத்திரப் பதிவு செய்ய  மறுக்கின்றனர் என்றனர். ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் பதில ளித்து பேசுகையில், திண்டிவனம்-நகரி ரயில்  திட்டப் பணிகளுக்கு நிலம் கொடுத்தவர்க ளுக்கு விரைவில் இழப்பீடு வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும். விவசாயப் பணி களுக்கு நூறு நாள் வேலைத்திட்டத் தொழி லாளர்களைப் பயன்படுத்துவது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோ சனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். இணையதளத்தில் உள்ள சில குறைபாடு களை சரிசெய்து வருகிறோம். அவசர அடங்  கல் தேவைக்கு அனைத்து தாலுகா அலுவ லகங்களுக்குச் சென்று சான்றிதழ் பெறலாம்.  தாமதத்தைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும். என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பார்த்தீபன், வேளாண்மை இணை இயக்கு நர் தீட்சித், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.