புதுதில்லி:
அவசர கால உதவிகளுக்காக மத்திய அரசு உருவாக்கியுள்ள “112 இந்தியா” எனும் செயலியை பொதுமக்கள் அனைவரும் தரவிறக்கம் செய்து, தேவைப்படும்போது பயன்படுத்தவேண்டும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கே ரெட்டி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் பேசுகையில், இந்த செயலி சேவை நாடு முழுவதும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.இதற்காக அந்தந்த மாநிலங்களுக்கு உரிய நிதி வழங்கப் பட்டுள்ளது. காவல்துறை, தீயணைப்பு, உடல்நலம், பெண்கள் பாதுகாப்புகுழந்தைகள் பாதுகாப்பு என அனைத்து விதமான அவசர கால உதவிக்கும் இந்த செயலியை பயன்படுத்தலாம்.பெண்கள் மற்றும் குழந்தைகள் பாது காப்பு தொடர்பாக தொடர்புகொள்வோர், இதில் உள்ள shout எனும் ஆப்சனை பயன்படுத்தினால் அருகில் உள்ள இதற்கென நியமிக்கப்பட்ட ஊழியர்கள் உடனடியாக வந்து உதவுவார்கள். கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இச்செய லியை தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.