தேனி
தேனி ஒன்றிய பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட விளிம்பு நிலை மாணவர்களின் பெற்றோருக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
தேனி ஒன்றியப் பகுதிகளில் கொரோனா பாதிப்பினால் வேலையின்றி தவிக்கும் அரன்மணைபுதூர் ,கொடுவிலார்பட்டி ,நாகலாபுரம், சீரங்கபுரம், தப்புக்குண்டு, பாலகிருஷ்ணா புரம் ,காட்டுநாயக்கன்பட்டி, சிவலிங்க நாயக்கன்பட்டி ,குப்பிநாயக்கன்பட்டி மற்றும் வீரசின்னமாள்புரம் உட்பட 15கிராமங்களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தேனி வட்டார கிளையின் சார்பில் சுமார் 250ஏழை எளிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரூ .525மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சங்கத்தின் தேனி மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி, நிர்வாகிகள் முருகானந்தராஜா,, இராம் குமார், தாழைக்குமரன், ராஜவேலு, சௌந்தரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.