tamilnadu

img

மக்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

புதுக்கோட்டை:
அறம் மக்கள் நலச் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 5ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா கால நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.திருச்சியிலிருந்து இயங்கி வரும் அறம் மக்கள் நலச் சங்கம் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்கள் கடுமையான துயரங்களை சந்தித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு அறம் மக்கள் நலச்சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. 

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிவாரணம் வழங்கும் நிகழச்சிக்கு அறம் மக்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.இராஜா தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.கே.ரமேஷ்குமார், மாநில துணைத் தலைவர் ஏ.பி.ராஜப்பா, மாநில ஒருங்கிணைப்பாளர் புதுக்கோட்டைசரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், சி.அன்புமணவாளன், சிஐடியு மாவட்டசெயலாளர் ஏ.ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் கே.முகமதலிஜின்னா, எஸ்.பாலசுப்பிரமணியன், எம்.ஜியாவுதீன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி மற்றும் நிர்வாகிகள் பி.சுசீலா, கே.நாடியம்மை, மேடைக் கலைஞர்கள் சங்க நிர்வாகி எல்.வடிவேல் உள்ளிட்டோர் வாழ்த்திப்பேசினர்.