tamilnadu

img

வேலூர்: புதிய காவல் கண்காணிப்பாளராக ராஜேஷ் கண்ணன் பதவியேற்பு  

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் இன்று பதவியேற்று கொண்டார்.  

தமிழகம் முழுவதும் 12 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசின் கூடுதல் தலைமை செயலர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி வேலூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த செல்வக்குமார் காவல் நிர்வாக ஏஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.  

அதனை தொடர்ந்து சென்னை மாநகர் புளியந்தோப்பு துணை ஆணையராக இருந்த ராஜேஷ் கண்ணன் ஐபிஎஸ் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். அதனடிப்படையில் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ராஜேஷ் கண்ணன் இன்று பதவியேற்று கொண்டார்.