உதகை, மார்ச் 19- கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அனைத்து காவல் நிலையம் மற்றும் காவல் குடி யிருப்புகளில் சுகாதாரமாக வைத்திட நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள் ளார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சசிமோகன் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள், ஆயுதப்படை மற்றும் அனைத்து போக்குவரத்து பிரிவில் பணி யாற்றி வரும் அனைத்து அதிகாரிகள் மற்றும் காவ லர்களும் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என்றார். மேலும், அனைத்து காவல் நிலையங்களும், காவலர் குடியிருப்புகள் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளிலிலும் நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வகத்தின் உதவியுடன் வைரஸ் தடுப்பு நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித் தார். இதனடிப்படையில், வியாழனன்று அனைத்து காவல் நிலையங்களையும், காவலர் குடியிருப்பு பகுதிகளையும் சுத்தப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.