tamilnadu

img

தமிழ் சமுதாயத்தின் அடையாளம் திருக்குறள் இலங்கை வடமாகாண முன்னாள் முதல்வர் பேச்சு

வேலூர், ஜன.11- தமிழர்கள் மற்றும் தமிழ் சமுதாயத்தின் அடையாளம் திருக்குறள்  என இலங்கை யின் வடமாகாண முன்னாள் முதல்வர் க.வி. விக்னேஷ்வரன்  கூறினார். வேலூர் தமிழ்ச் சங்கம் மற்றும் ஊரீசு கல்லூரி இணைந்து தமிழர் திருநாள் விழா மற்றும் திருவள்ளுவர் விழாவை ஊரீசு கல்லூரி யில் நடத்தின. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, இலங்கையின் வடமாகாண முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஷ்வ ரன் பேசியதாவது:- திருக்குறள் தான் தமிழர்கள் மற்றும் தமிழ் சமுதாயத்தின் அடையாளம்.  1950 காலக்கட்டங்களில் ம.பொ.சி கொழும்பில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், ‘பொய்யாமை பற்றிய திருக்குறளை’ விரிவாக எடுத்துக் கூறினார்.  அறம் என்பது மனதுக்குள் மாசு இல்லாமல் இருப்பதுதான், அதேபோல் வாழ்க்கையின் நேர்கோடு என்பது சிந்தனை, சொல், செயல்  ஆகியவையோடு பயணிப் பது. பொய்மை பிறருக்கு நன்மை செய்யுமானால் அது பொய்யல்ல வாய்மையே. அதுவே தமக்காக பொய் உரைத்தால் அது வாய்மை அல்ல பொய்மைதான். வாழ்க்கை முரண்பாடு உடை யது. இதில் நாம் வாழும் வாழ்க்கை நேர்மையாக இருக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். வேலூர் தமிழ்ச்சங்கத் தலைவரும் விஐடி வேந்தரு மான டாக்டர். கோ விசுவநா தன் தலைமை தாங்கி பேசுகையில், ‘உலகில் 7 மொழிகளை மட்டும் தான் மூத்த மொழிகள் எனக் கூறு வர். அதனுள் தமிழ்மொழி யும் உண்டு.  சுமார் 3000 ஆண்டுகளாக தமிழ் மொழி மட்டும் தான் அதன் தொன்மை மாறாமல் இருக்கி றது.   உலகில் 150 நாடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள் அதில் குறிப்பாக 30 நாடு களில் தமிழர்கள் கணிசமான அளவு உள்ளனர். தமிழ் மொழியை நாம் பாதுகாக்க வேண்டும் ,அது நம் கடமை.’ என்றார். முன்னதாக ஊரீசு கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். தியோடர் ராஜ்குமார் வர வேற்றார். ஊரீசு கல்லூரி முதல்வர் (பொறுப்பு)  நெல்சன் விமலநாதன் முன்னிலை வகித்தார். வேலூர் சட்டமன்ற உறுப்பி னர் ப. கார்த்திகேயன், இரத்தின நடராசன், சிவசுப்பிரமணியம், சிங்கராயர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவை சுகுமார் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் இன்ப எழிலன் நன்றி கூறினார்.