tamilnadu

img

எரியோடு பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளாக மாற்றம்

வேடசந்தூர், அக்.29- வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் தனியார் இடங்களில் அமைக்கப்பட்டு பயனற்று, ஆபத்தான நிலையிலுள்ள ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேக ரிப்பாக மாற்றுவதற்கு நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்அருகே உள்ள எரியோடு காவல்நிலை யத்திற்குட்பட்ட கிராமப் பகுதிகளில் தனியார் தோட் டங்கள், வீட்டுமனைகளில் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி வேல் உத்தரவின் பேரில் எரி யோடு காவல்துறையினர் கிராமம் கிராமமாகச் சென்று தனியாரிடங்களில் ஆழ் துளைக் கிணறு அமைக்கப் பட்டு தற்போது பயனற்ற நிலையில் உள்ள ஆழ் துளைக் கிணறுகளைக் கணக்கெடுத்து அதை மூடு வதற்கோ அல்லது மழை நீர் சேகரிப்பாக மாற்ற வேண்டும் என்று கூறி வரு கின்றனார். இந்த உத்தரவை ஏற்று புதுரோட்டைச் சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இளங்கோவன் தனது காலி இடத்தில் பய னற்றுக் கிடந்த ஆழ்துளைக் கிணற்றை எரியோடு காவல் துறையினர் முன்னிலை யில் மழைநீர் சேகரிப்பாக மாற்றினார்.