உத்தரகண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷின் எஸ்.பி.எஸ் அரசு மருத்துவமனையில் கொரோனா இல்லை என போலி சான்றிதழ் வழங்கி வந்துள்ளனர்.
ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ளாமல்,கொரோனா தொற்றின் அறிகுறிகள் எதுவும் இல்லை என்று சான்றிதழ் வழங்கியது தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்திராவிடப்பட்டுள்ளது . இந்த சான்றிதழானது பெரும்பாலும், வேலை தேடி மற்ற மாவட்டங்களுக்கு செல்ல விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களை மீறி வழங்கப்பட்டது. மருத்துவரின் கையொப்பம் மற்றும் மருத்துவமனையின் முத்திரையுடன் மருத்துவர் வழங்கிய ஓபிடி சீட்டு மாதிரியையும் ஒரு ஆதாரத்தை தயாரித்துள்ளனர். புதன்கிழமை உத்தரகண்ட் தலைமைச் செயலாளர் ஓம்.பிரகாஷ் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளார் .
விசாரணையில் மருத்துவமனையில் எவ்வளவு காலம் மோசடி நடந்து கொண்டிருந்தது, எத்தனை மருத்துவர்கள் இதில் ஈடுபட்டனர் என்பது கண்டறியப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனையில், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.