tamilnadu

img

வெளியூருக்கு குடிபெயர்ந்த அக்லக் குடும்பத்தினர்

தாத்ரி, ஏப்.14-உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரி அருகிலுள்ளது பிஷாரா கிராமம். இங்குமாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்று கூறி, இஸ்லாமிய முதியவரான முகம்மது அக்லக்கும் (52), அவரது மகன்தானிஷ் (20) என்பவரும்பாஜகவினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். சுமார் 200-க்கும் மேற் பட்டோர் சேர்ந்து நடத்திய இத்தாக்குதலில், அக்லக் உயிரிழந்த நிலையில், தானிஷ்படுகாயங்களுடன் தப்பினார். 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம், நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அப்போதிருந்த அகிலேஷ் அரசு, குற்றவாளிகளைக் கைது செய்து, அக்லக்குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவித்தது. ஆனால், பின்னர் அதிகாரத்திற்கு வந்த- ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, குற்றவாளிகளை சர்வ சுதந்திரமாக உலவ விட்டு, அக்லக் குடும்பத்தினரை அச்சத்திற்கு உள்ளாக்கியது. மீண்டும் தங்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று கருதிய அக்லக் குடும்பத்தினர், பிஷாராவை விட்டுவெளியேறி விட்டனர். அக்லக் கின் மூன்று மகன்களும் தில்லிக்கு குடி பெயர்ந்து விட்டனர். அக்லக்கின் மூத்தசகோதரரான ஜான் முகம்மதுவும், அவரது குடும்பத்தினரும், பிஷாராவை விட்டு தாத்ரிக்கு சென்று விட்டனர். இந்நிலையில், ஜான் முகம்மது குடும்பத்தினர், கடந்த 11-ஆம் தேதி நடந்ததேர்தலின்போது, தாத்ரியில் தான் வாக்களித்துள்ளனர்.இதுதொடர்பாக, ஜான்முகம்மது செய்தியாளர் களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், 40 ஆண்டுகளாக வசித்த ஊரைவிட்டு வெளியேறி, முதன் முறையாக வெளியூருக்கு வந்து வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப வாழப் பழகிக் கொண்டிருப்பதாகவும் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.