சென்னை
உலகைத் தனது உள்ளங்கையில் வைத்து மிரட்டிவரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தமிழகத்திலும் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து துறை தொழிலாளிகளும் வேலை இல்லாமல் வீட்டினுள் முடங்கி வருகின்றனர்.
பணம் கொழிக்கும் துறையான திரைத்துறையில் கடந்த ஒருமாத காலமாக சூட்டிங் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திரைத்துறை சார்ந்த தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தியத் திரைத்துறையில் முதன்மையான இடத்தில் உள்ள கோலிவுட் (தமிழகம்) பிரிவு தொழிலாளர்கள் கொரோனா தாக்கத்தால் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சிவக்குமார் குடும்பத்தினர் தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளனர்.