லக்னோ, மே 24- கொரோனாவை விடவும், பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்த அச்சமே மக்களுக்கு அதி கம் இருப்பதாக ஐஐஎம் நிறுவனத் தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இந்தியப் பொருளா தார வளர்ச்சி மீது பெரும்பான்மை யான இந்தியர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதும் இந்த ஆய்வில் முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது. லக்னோ இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (IIM Lucknow)வளரும் பொருளாதாரங்களுக்கான சந்தைப் படுத்துதல் மையம் (Centre for Marketing in Emerging Economies - CMEE) நாடு முழுவதும் ஆன்லைன் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த ஆய்வின்போதுதான், 79 சதவிகித இந்தியர்கள் பொருளாதாரப் பிரச்சனைகள் மீது அச்சம் கொண்டிருப்ப தாகத் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றிவிடுமோ? என்ற அச்சத்தை விட ஊரடங்கால் தங்களின் பொருளா தார நெருக்கடி மேலும் மோசமாகிவிடுமோ? என்ற அச்சம் தான் அதிகம் இருப்பதாக பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர். பொதுமுடக்கத்தின் முதலாவது காலகட்டத்தில் 57 சத விகித இந்தியர்களிடம் பொருளாதார வளர்ச்சி குறித்த அச் சம் இருந்துள்ளது. இதுவே, இரண்டாவது பொதுமுடக்க காலத்தில் 63 சதவிகிதமாக உயர்ந்து, மூன்றாவது ஊரடங்கு காலகட்டத்தில் 79 சதவிகிதமாக அதிகரித்து இருப்பதாக என்று சிஎம்இஇ ஆய்வு நிறுவனம் கூறுகிறது. இந்தியாவின் 23 மாநிலங்களில் 104 இரண்டாம் அடுக்கு மூன்றாம் அடுக்கு நகரங்களில், முகநூல், லிங்க்டு இன் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.