tamilnadu

img

வயலுக்குத் தண்ணீர் விட மறுத்ததால் தலித் விவசாயி கொலை

உத்திரபிரதேசத்தில் வயலுக்குத் தண்ணீர் விட மறுத்ததால் ஒரு தலித் விவசாயி தலைத் துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்துக் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உத்திரபிரதேச மாநிலம் தின் நகர் ஜெய்பூர் கிராமத்தில் நேது லால் ஜாதவ் திங்களன்று தனது வயலில் தண்ணீர் விட்டுக்கொண்டு இருந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு விவசாயி ரூ கிஷோர், அவருடைய வயலுக்கு உடனடியாகத் தண்ணீரைத் திருப்பி விடவேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால், ஜாதவ் மறுத்துள்ளார். தண்ணீர் அதிகமாகத் தேவையுள்ளதாகக் கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த ரூ கிஷோர் மண்வெட்டியால் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால், ஜாதவ் தலைத் துண்டிக்கப்பட்டுச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஜாதவ்வின் மகன் ஓம்பல் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (அட்டூழியங்களைத் தடுக்கும்) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜெய்பூர் பகுதியில் 70 சதவிகிதம் பட்டியல் சாதியைச் சார்ந்தவர்களாகும்.