ஐ.நா.சபை, ஜூன் 18- ஐ.நா. சபையின் பாது காப்புக்கவுன்சிலில் நிரந்தர மற்ற உறுப்பினராக இந்தியா போட்டியின்றி தேர்வு செய் யப்பட்டுள்ளது. 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாது காப்புக் கவுன்சிலில் அமெ ரிக்கா, ரஷ்யா, இங்கிலா ந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. பாது காப்பு கவுன்சிலில் நிரந்தர மற்ற உறுப்பினர் பதவிகளு க்கு மெக்சிகோ, இந்தியா, அயர்லாந்து மற்றும் நார்வே ஆகியவை புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டன,
ஒவ்வொரு ஆண்டும் பொதுச்சபை, 5 நிரந்தரமற்ற உறுப்பினர்களை (மொத்தம் 10 பேரில்) 2 ஆண்டு காலத்து க்கு தேர்வு செய்யும். இந்த 10 இடங்களில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளுக்கு 5, கிழக்கு ஐரோப்பிய நாடுக ளுக்கு 1, லத்தீன் அமெரிக் கா மற்றும் கரீபியன் நாடு களுக்கு 2 மற்றும் மேற்கு ஐரோப்பியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு 2 என இட ஒதுக்கீடு அமைந்துள்ளது. இந்த ஆண்டில் 5 நிரந்தரமற்ற உறுப்பி னர்களுக்கான தேர்தல் அறி விக்கப்பட்டது. 2021, 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கு உறுப்பினர் பதவி வகிப்ப தற்கான இந்த தேர்தலில் ஆசிய, பசிபிக் பிரிவில் இந்தியா போட்டியிட்டது. இந்தியாவின் வேட்பு மனு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீனா மற்றும் பாகிஸ் தான் உள்ளிட்ட 55 உறுப்பி னர்களை கொண்ட ஆசிய பசிபிக் குழுவால் ஒருமன தாக ஒப்புக்கொள்ளப் பட்டது. இந்த தேர்தலில் போட்டி யிட்ட கனடா, அயர்லாந்து மற்றும் நார்வேவிடம் தோற்றது. மெக்சிகோவும் இந்தியாவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டன.
பிரதமர் நன்றி
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக, உலக நாடுகள் வழங்கிய ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.