தூத்துக்குடி:
தூத்துக்குடியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் புதன் அன்று தெரிவித்த தாவது:
தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் இருந்த நிலையில் தற்போதுபடிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது. இறப்பு விகிதம் மிக குறைவாக 0.7 என்றஅளவில் உள்ளது. இருப்பினும் அரசு விதிமுறைகளை மக்கள்கடைபிடித்தாலே கொரோனாவில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள முடியும். தூத்துக்குடியில் கடல் சார்ந்த மீனவ பகுதிகள் உள்ளன.இப்பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து இதுவரை2 ஆயிரத்திற்கும் மேற்பட்டபரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.இவ்வாறு அவர் கூறினார்.