தூத்துக்குடி:
அதி வேகமாக வந்த மாவட்ட ஆட்சியரின் கார்மீது மோதாமலிருக்க லாரியை டிரைவர் ஒதுக்கியதால் அதனால் கடம்பூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதனால் காரில் வந்த மாவட்ட ஆட்சியர் தப்பினார்.தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர், கயத்தாறு, கோவில்பட்டி பகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெள்ளியன்று காலை காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் ஓட்டிச் சென்றுள்ளார். பசுவந்தனையில் இருந்து கடம்பூர் செல்லும் வழியில் தெற்கு வண்டானம் அருகில் உள்ள சிறிய பாலத்தில் சென்றபோது எதிரே ஜல்லி ஏற்றி வந்த லாரி,ஆட்சியரின் கார் அதிவேகமாக எதிரே வந்ததால் லாரியை டிரைவர் இடதுபுறமாக ஒதுக்கியதால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.