தூத்துக்குடியில் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
புதுமைப்பெண் திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி அன்று வடசென்னை பாரதி மகளிர் கல்லூரில் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் விரிவாக்கப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் உள்ள காமராஜர் கல்லூரியில் தொடங்கி வைத்தார். இதன்மூலம், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.