tamilnadu

img

நூறு நாள் வேலை கேட்டு தொழிலாளர்கள் போராட்டம்

முசிறி, ஜூலை 19- திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இதில் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்க ளுக்கு முறையாக 100 நாள் வேலை திட்டம் வழங்குவதில்லை. முறை யாக குடிநீர் தருவதில்லை. தெரு விளக்குகள் எரிவதில்லை. மேலும் பல தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வழங்கவில்லை.  பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கை மீது சம்பந்தப்பட்ட அலு வலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவ தாக கூறி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் ஒன்றியச் செயலாளர் நல்லு சாமி தலைமையில் மாதர் சங்க மல்லிகா, விவசாயத் தொழிலாளர் சங்க பழனிச்சாமி முன்னிலையில் துறையூர்- முசிறி சாலையில் ஜம்பு நாதபுரம் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டம் செய்தனர். இதையறிந்து வந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஜெம்புநாதபுரம் காவல் நிலைய வளாகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் முசிறி தாசில்தார் ஆறு முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் 100 நாள் வேலை திட்டம் அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையாக கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை 15 தினங்களுக்குள் செய்து தரப்படும் உள்ளிட்டவை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். போராட்டத் தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர், மாதர் சங்கத்தினர் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.