tamilnadu

img

திருச்சி காவேரி மருத்துவமனை நீரிழிவு நோயாளிகளின் கால்களை சீரமைக்கும் அதிநவீன நுண்அறுவை சிகிச்சை தொடக்கம்

திருச்சிராப்பள்ளி, பிப்.11- திருச்சி காவேரி மருத்துவமனையில் நீரிழிவு நோயாளிகளின் கால்களை சீர மைக்கும் அதிநவீன நுண்அறுவை சிகிச்சை யை வடகொரிய நாட்டின் தலைசிறந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜியாங்டேகிம் தொடங்கி வைத் தார்.  இந்நிகழ்ச்சியில் காவேரி மருத்துவ மனையின் செயல் இயக்குனர் டாக்டர் செங்குட்டுவன் பேசுகையில்: நீரிழிவு நோய் முற்றிய நிலையில் நோயாளிகளின் கால்களில் பாதிப்பு ஏற்படுவது உண்டு. இத னால் அவர்கள் கால் விரல்களையோ அல்லது கால்களையோ இழக்க நேரிடும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து பாதங் களை மீட்டு மறு சீரமைப்பு செய்யும் அதி நவீன நுண் அறுவை சிகிச்சை திருச்சி காவேரி மருத்துவமனையில் தொடங்கப் பட்டுள்ளது. திருச்சியில் முதன் முறையாக இந்த அதிநவீன சிகிச்சையை அறிமுகம் செய்வதன் மூலம் உலகதரமான சிகிச்சை களை காவேரி மருத்துவமனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமிதம் கொள்கி றது என்றார். காவேரி மருத்துவமனை பிளாஸ் அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் ஸ்கந்தா கூறுகையில்: ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பு தீவிர நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாதங்கள் அறுவை சிகிச்சைக்கு முன்னுரிமை வழங்குவ தில்லை. ஆனால் காவேரி மருத்துவமனை யில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பாதங்களுக்கான நுண் அறுவை சிகிச்சை யை திறம்பட செய்து காட்டி உள்ளோம் என்றார்.