பெண்ணை ஆபாசமாக படம் பிடித்தவரை கைது செய்க!
சிபிஎம் முற்றுகை போராட்டம்
திருச்சி உறையூர் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராகிம் பாதுஷா (28). இவர் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த ஏப்.3 அன்று, ஒரு வீட்டில் பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டனர். உடனே இப்ரா கிம் பாதுஷா தனது செல்போனை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவ தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். புகார் அளித்து தற்போது வரை அந்த வாலிபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து காவிரி நகர் பொதுமக்கள் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் அந்த வாலிபரை கைது செய்ய வலி யுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் செவ்வா யன்று உறையூர் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து காவல்நிலையம் முன்பு அமர்ந்து மாதர் சங்க நிர்வாகி வள்ளி தலைமையில், மாநகர் மாவட்டச் செயலாளர் வெற்றிச் செல்வம், மேற்கு பகுதி செயலா ளர் எம்.ஐ.ரபிக் அஹமத், அப்துல் கயூம், ஆசிக்அலி உள்ளிட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து போலீசார் இப்ராகிம் பாதுஷா மீது வழக்குப் பதிவு ய்தனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இப்ராகிம் பாதுஷா வெளியூரில் இருப்பதாக வும் அவரை பிடிக்க தனிப்படை அமைத்து ஒரு வாரத்திற்குள் பிடிப்பதாகவும் உறுதி அளித்தனர். அதன்பின்னர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர்.
மக்கள் குறைகேட்பு கூட்டம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அரியலூர், ஏப்.9 - அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கள் கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பய னாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு, ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து பெறப்பட்ட 441 கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக அவர், மாற்றுத் திறனாளிகள் நல அலுவல கம் சார்பில் 3 பேருக்கு காதொலி கருவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 2 மாற்றுத்திற னாளிகள் குழுக்களுக்கு வாழ்வாதார நிதியாக தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், ஒரு முதியோர் குழுவுக்கு ஆதார நிதியாக ரூ.15,000-க்கான காசோலையும், சுய உதவிக் குழு உறுப்பினர் (இறந்தவர்) காப்பீட்டு தொகை ரூ.2 லட்சத்துக்கான காசோலையும் என மொத்தம் ரூ.4.15 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார்.
வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் காயம்
திருத்து றைப்பூண்டி, ஏப்.9- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் சேகல் ஊராட்சி கிராமத்துக்குட்பட்ட தீவம்பாள்பட்டினம் அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.33.50 லட்சத்தில் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. தரமற்ற முறையில் பள்ளியின் கட்டுமான பணிகள் இருந்ததால், வகுப்பறை ஒன்றின் மேற்கூரை இடிந்து மாணவர்கள் தலையில் விழுந்தது. இதில், காயமடைந்த நான்கு மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். தரமற்ற முறையில் கட்டு மானப் பணி மேற்கொண்ட ஒப்பந்தக்காரர் மீது சட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாமணி கடை தெருவில் சாலை மறியல் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊரக வளர்ச்சித் துறை அலுவலகர்கள் சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் 9 பேர் கொண்ட குழுவினர் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த மார்ச் 28 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது பெரம்பலூர் மாவட்ட ஆட்சி யர் கோரிக்கையை கேட்காமல், அமைச்சரை போய் பாருங்கள், என்னால் ஒன்றும் செய்ய முடியாது என கூறி மனு வினை மாநில நிர்வாகிகள் முன்னிலையி லேயே கிழித்து குப்பை தொட்டியில் போட்டு அவமானப்படுத்தி, கைது செய்ய உத்தர விட்டார். போலீசார், அவர்கள் 9 பேரையும் கைது செய்து, சுமார் 2 மணிநேரத்திற்கு பிறகு விடுவித்தனர். இதனால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சி யரை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் ஏப்.8 அன்று கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்து வது என மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அன்புராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் பிரபு, மாநில செயலாளர் ஷேக்தாவூத், மாநிலத் துணை தலைவர் சரவணன் ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.