பல்லடத்தில் தமுஎகச புதிய கிளை உதயம்
திருப்பூர் மாவட்டம் பல் லடத்தில் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் புதிய கிளை அமைக்கப்பட்டது. பல்லடம் என்.ஜி.ஆர் சாலை மெரிட் பயிற்சி மைய அரங்கில் தமுஎகச கிளைத் தொடக்க விழா நடைபெற் றது. உடுமலை துரையரசன், ஜல்லிபட்டி கண்ணையன் ஆகியோர் பாடல்கள் பாட, அஸ்வின் சுந்தரத் தின் புல்லாங்குழல் இசையோடு நிகச்சிகள் துவங்கியது. இந்நிகழ்விற்கு இயற்கை ஆர்வலர் து. சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். கவிஞர் கவியுழவன் வரவேற்றார். அமைப்பின் நோக் கம் குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் பேசினார். மேலும், ஐந்து நூல் கள் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றன. இதை யடுத்து எழுத்தாளர்கள் சிறப்பிக்கப்பட் டனர். தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் லட்சுமி காந்தன் பண்பாட்டு தளத் தில், எழுத்து துறையில், திரைத்துறையில் தமுஎகச-வின் பணிகள் குறித்தும், பல்ல டம் பகுதியில் முற்போக்கு மரபை முன்னெ டுக்க வேண்டிய அவசியம் குறித்தும் பேசி னார். மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், கோவை சதாசிவம் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். இதையடுத்து தமுஎகச பல்லடம் கிளை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக பாலசுப்பிரமணியம், செயலாள ராக கவியுழவன், பொருளாளராக சுந்தர மூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவர் பி.ஆர். கணேசன் அறிமு கப்படுத்தினார். எழுத்தாளர் தமிழ்வாணன் நன்றி கூறினார்.