tamilnadu

img

வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை ரத்து செய்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை ரத்து செய்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு அரசியலைப் பரப்பி வரும்  ஒன்றிய பாரதிய ஜனதா அரசு, வக்பு  வாரிய சொத்துக்களை அபகரிக்கும்  நோக்கம் கொண்ட வக்பு திருத்தச் சட் டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப் பூரில் தர்ணா போராட்டம் நடத்தி யது. திருப்பூர் காங்கேயம் கிராஸ், சிடிசி பேருந்து நிறுத்தம் அருகில்  நடத்தப்பட்ட இந்த தர்ணா போராட் டத்திற்கு, வேலம்பாளையம் நகரச்  செயலாளர் ச.நந்தகோபால் தலைமை வகித்தார். இதில், கட்சி யின் திருப்பூர் தெற்கு மாநகரச் செய லாளர் டி.ஜெயபால், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட நிர்வாகி ஏ. ஷகிலா, முஸ்லீம் லீக் மாவட்டத் துணைத் தலைவர் அப்துல் கலாம்  சிராஜி, திருப்பூர் வட்டார ஜமாத் உலமா சபை செயலாளர் அபுதாகீர்  ஆகியோர் ஒன்றிய மோடி அரசு  கொண்டு வந்துள்ள வக்பு வாரிய  திருத்தச் சட்டத்தின், மோசமான உள் நோக்கத்தை விளக்கிப் பேசினர். நிறைவாக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தௌ.சம்சீர் அகமது கண்டன உரையாற்றினார். இதில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே. ரங்கராஜ், ஆர்.குமார், செ.மணிகண் டன், வடக்கு மாநகரச் செயலாளர் ப. சௌந்தரரான், அவிநாசி ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி, ஊத் துக்குளி தாலுகா செயலாளர் கு. சரஸ்வதி, பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.பாலன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர். முடிவில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.காளி யப்பன் நன்றி கூறினார்.