ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம் துவக்கம்
சென்னை, ஜூலை 4 - வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வெள்ளிக்கிழமை (ஜூலை 4) தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடி தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்பு களை வழங்கினார். ஊட்டச்சத்துகளை அளிப்பதில் காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள், சிறுதானியங்கள் பெரும் பங்காற்றுகின்றன என்பதை கருத்தில் கொண்டு, இந்த விளை பொருட்கள் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதுடன், உழவர்களின் வருமானத்தை உயர்த்தும் வகை யில் இத்திட்டம் 18 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற காய்கறி விதைகள் அடங்கிய 15 லட்சம் காய்கறி விதைத் தொகுப்புகள், விரை வில் பலனளிக்கும் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய பழச்செடிகள் அடங்கிய 9 லட்சம் பழச்செடி தொகுப்புகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த மரத்து வரை, காராமணி உள்ளிட்ட பயறு வகைகள் அடங்கிய 1 லட்சம் பயறு வகை விதைத் தொகுப்புகள் விவசாய பெருமக்களுக்கு வழங்கப்பட உள்ளன. மேலும், 103 கோடியே 38 லட்சம் ரூபாய் செல வில் கட்டப்பட்டுள்ள 52 வேளாண் கட்டடங்களை யும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
திருச்செந்தூரில் தங்கும் விடுதிகள் திறப்பு
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப் பட்டுள்ள 52 அறைகளுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதியை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் இந்த கோவிலுக்கு 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவின் கீழ் மேற்கொள்ளப் பட்ட திருப்பணிகள் ஒரு பகுதியாக இந்த விடுதி அமைக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே, 33.25 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபம், வரிசை வளாகம், சுகாதார வளாகங்கள், கலையரங்கம், நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் ஆகியவையும் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அர்ச்சகர் பதவி உயர்வு ஆணைகள்
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலில் கைங்கர்யம் பணியிடத் தில் பணிபுரிந்து வந்த 6 திருக்கோ யில் பணியாளர்களுக்கு அர்ச்சகர் களாக பதவி உயர்வு வழங்கி, அதற் கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச் சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன் னீர்செல்வம், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.