பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு மயிலாடுதுறையில் விவசாயிகள் போராட்டம்
பருவம் தவறி பெய்த கனமழை
லாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜன.17, 18 இல் பெய்த கன மழையால் சுமார் 60 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர் சேத மடைந்தது. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத்தை வழங்கிட கோரி அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதனன்று மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு கும்பகோணம் - மயிலாடுதுறை மெயின்ரோடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் இயற்கை விவசாயி அ.ராமலிங்கம், டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் அன்பழகன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முருகன் மற்றும் கூட்டமைப்பிலுள்ள விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள், 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கடந்த ஜனவரி 17, 18 இல் பெய்த கனமழையால் சுமார் 60 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர் சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத்தை வழங்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.2450 வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசே குவிண்டாலுக்கு ரூ.3500/- உயர்த்தி வழங்க வேண்டும். இன்சூ ரன்ஸ் கம்பெனியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பிரிமியம் செலுத்தியும், வேளாண்மை துறை யின் தவறான கணக்கீட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்காமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இந்த குளறுபடிகளை போக்க தமிழ் நாடு அரசே இன்சூரன்ஸ் கம்பெனியை ஏற்று நடத்த வேண்டும். கடலூர் மாவட்டத்தில் வழங்கியது போல் மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி பாலாஜி தலைமையிலான காவல்படை, விவசாயிகள் சங்க தலைவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றினர். காவல்துறையின் அத்து மீறலை முறியடித்து, மீண்டும் போராட்டத்தை விவசாயிகள் கம்பீ ரத்துடன் தொடர்ந்தனர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்தையடுத்து வேளாண் துறை, வருவாய்துறை அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தற்காலிகமாக கைவிட்டனர்.