tamilnadu

img

ஊனத்தை இழிவாக பேசிய அமைச்சரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஊனத்தை இழிவாக பேசிய அமைச்சரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

திமுக பொதுச் செயலாளரும், தமிழ் நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சரு மாகிய  துரைமுருகன், பொது வெளியில்,  மாற்றுத்திறனாளிகளை கொச்சைப் படுத்தி பேசியதை கண்டித்து புதன் கிழமை தஞ்சை பழைய பேருந்து நிலை யம் அருகே, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகரச் செயலா ளர் சி.ராஜன் தலைமை வகித்தார். இடது சாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பா ளர் துரை.மதிவாணன் கண்டன உரை யாற்றினார். தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோ வன் நிறைவுரையாற்றினார்.  இதில் மாவட்டப் பொருளாளர் மோகன், ஒரத்தநாடு ஒன்றியச் செயலா ளர் மதியழகன், ஒன்றிய துணைச் செய லாளர் சிவகுமார், தஞ்சை ஒன்றிய துணைத் தலைவர் நாகராஜ், துணைச் செயலாளர் ஆறுமுகம், தஞ்சை ஒன்றி யப் பொருளாளர் கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கும்பகோணம் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக் குழு உறுப்பினர் பழ. அன்புமணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட துணைத் தலைவர் சர வணன், கும்பகோணம் மாநகரத் தலை வர் பாரூக், திருவிடைமருதூர் வடக்கு  ஒன்றிய துணைச் செயலாளர் சேகர்,  ஒன்றிய பொறுப்பாளர்கள் தீபா, தாமோ தரன், விஜயலட்சுமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய தொழிற்சங்க மையம், ஓய்வூதி யர் சங்கம் ஆகியோர் ஆதரவு தெரிவித்த னர். மயிலாடுதுறை மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவல கம் அருகில் தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகள் ஊனத்தை நை யாண்டி செய்த அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் யூ.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் டி.கணே சன் மற்றும் நிர்வாகிகள் கண்டன உரை யாற்றினர். அதே போன்று சீர்காழியில் மாவட்டச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.