tamilnadu

மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு  பாலியல் வன்கொடுமை

குற்றவாளி கைது

அரியலூர், ஏப்.9 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து தா.பழூர் அருகே உள்ள காரைகாட்டங்குறிச்சி காலனி தெருவைச் சேர்ந்தவர் ரவி (54). கூலி தொழிலாளியான இவர், 35 வயது மதிக்கத்தக்க திருமணமாகாத வாய் பேசாத-காது கேளாத மன வளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து அவரை அச்சுறுத்தி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கால் வலி வந்ததாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர், கடந்த மார்ச் 28 அன்று சுத்தமல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காண்பித்துள்ளனர். பின்னர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காண்பித்த போது, அவரை பரிசோதித்த மருத்துவர், அப்பெண் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், பெண்ணிடம் விசாரித்த போது அவர் நடந்ததையும், அதற்கு  காரணமான ரவியையும் கை ஜாடையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ரவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.