tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

நலத்திட்ட  உதவிகள்  வழங்கல்

புதுக்கோட்டை, ஏப்.9 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி வட்டம், அரசர்குளம் மெல்பாதி கிரா மத்தில் புதன்கிழமை நடை பெற்ற மக்கள் தொடர்பு  முகாமில் 391 பயனாளி களுக்கு ரூ.4.80 கோடி யில் பல்வேறு அரசு  நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மு. அருணா வழங்கினார். முகாமில், அரசு அலுவ லர்கள் பங்கேற்றனர். பைக் திருட்டு  தஞ்சாவூர், ஏப்.9-  தஞ்சாவூர் மாவட்டம், சாணூரப்பட்டி கீழத் தெருவை சேர்ந்தவர் நந்த குமார் (63). இவர் கடந்த 4  ஆம் தேதி வெளியில் சென்று விட்டு தனது பைக்கை இரவு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நந்த குமார் பல இடங்களிலும் பைக்கை தேடிப் பார்த்தார்.  ஆனால் பைக் கிடைக்க வில்லை. இதுகுறித்து நந்தகுமார் செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் புகார்  செய்தார். இதன்பேரில் செங்கிப்பட்டி காவல்துறை யினர் வழக்குப் பதிந்து  விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசி டிவியில் பதிவாகியிருந்த காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். கடை உரிமையாளரைத் தாக்கியவர் கைது  தஞ்சாவூர், ஏப்.9 - தஞ்சாவூர் அருகே கீழவஸ்தாசாவடி, கோவிந் தராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (60). மளிகை கடை வைத்து  நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த செந்தில் குமார் (52), சண்முகம் கடைக்கு வந்து கடனுக்கு மளிகைப் பொருட்கள் கேட்டுள்ளார். ஆனால் ஏற்கனவே மளிகைப் பொருட்கள் வாங்கிய கடன்  தொகையை கொடுக்கும் படி சண்முகம் கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில் குமார், சண்முகத்தை தாக்கியுள்ளார். இது குறித்து சண்முகம் தாலுகா காவல்நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிந்து செந்தில் குமாரை கைது செய்தனர். வாரச் சந்தையில் கோஷ்டி மோதல் அரியலூர், ஏப்.9 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வாரச் சந்தை தற்காலிகமாக விருத்தாச்சலம் சாலை யில் உள்ள மீன் மார்க்கெட் கோடபுள்ளை குட்டையில் இயங்கி வருகிறது. இதில் உடையார்பாளையம் அருகே உள்ள பிளிச்சுக் குளி கிராமத்தைச் சேர்ந்த முகிலன் (38) என்பவர் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார்.  இந்நிலையில் கீழக்குடி யிருப்பு கிராமத்தை சேர்ந்த  ராமர் (45), அதே பகுதி யைச் சேர்ந்த ராமராஜன் (38) ஆகியோருக்கு இடையே பூக்கடை வைத்தது  தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப் படுகிறது. இதில் இரு வருக்கும் இடையே வாய்  தகராறு ஏற்பட்டு, பின்னர் அது முற்றியதில், ராமர்,  ராமராஜன் ஆகிய இரு வரும் சேர்ந்து முகிலனை கட்டையால் தலையில் தாக்கியுள்ளனர்.  இதில் படுகாயமடைந்த முகிலன்  அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று  வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரில் ராமர், ராமராஜன் ஆகியோர்  மீது வழக்கு பதிந்து ராமரை  கைது செய்து, ராம ராஜனை தேடி வருகின்றனர்.