மயிலாடுதுறை - காரைக்குடி பயணிகள் ரயில்களை உடனே இயக்க கோரிக்கை
மயிலாடுதுறை - காரைக்குடி ரயில் பாதையில் மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட அனைத்து பயணிகள் ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என்று பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் வ.விவேகானந்தம், துணைத் தலைவர் வே.ராமலிங்கம், செயலாளர் கு.முகேஷ், துணைச் செயலாளர் ப.ஆத்மநாதன், பொருளாளர் ஈகா வைத்தியநாதன் ஆகி யோர் தெற்கு ரயில்வே பொது மேலா ளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அம்மனுவில், “மயிலாடுதுறை - காரைக்குடி பிரிவில், 19 வருடங்களுக்கு பிறகு, பட்டுக்கோட்டை வழியாக தாம் பரம் - இராமேஸ்வரம் - தாம்பரம் தினசரி இரவுநேர பாம்பன் விரைவு ரயில் (16103/ 16104) ஏப்.6 ஆம் தேதியில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மூலமாக இப்பகுதி மக்கள் சென்னை மற்றும் இராமேஸ்வரத்திற்கு சென்றுவர மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அகல ரயில் பாதை அமைக்கும் பணி களுக்காக 2012 ஆம் ஆண்டு முதல் திரு வாரூர்- பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில், பயணிகள் ரயில்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டன. 2019 இல் அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு மயிலாடுதுறையில் இருந்து திரு வாரூர் - பட்டுக்கோட்டை வழியாக காரைக் குடி வரை பயணிகள் ரயில் (வண்டி எண் 06541, 06542, 06197, 06198) இயக்கப் பட்டது. மயிலாடுதுறையில் இருந்து இயக்கப் பட்டு வந்த பயணிகள் ரயில் தற்போது திருவாரூரில் இருந்து (வண்டி எண். 06197/06198) பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதனால், காரைக்குடி பகுதியில் இருந்து நேரடியாக மயிலாடுதுறை வரை செல்லவும், மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடி வரை நேரடியாக ஒரே ரயிலில் செல்லவும் இயலாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும், காலை நேரத்தில் காரைக்குடி யில் இருந்து மயிலாடுதுறைக்கு பயணி கள் ரயில்கள் இன்னும் இயக்கப்பட வில்லை. தெற்கு ரயில்வேயால் 2022 இல் முன்மொழிவு செய்யப்பட்ட மயிலாடு துறை - காரைக்குடி பயணிகள் ரயிலும் (16859/16860)இன்று வரை இயக்கப்பட வில்லை. இந்த ரயில் மயிலாடுதுறையில் சோழன் அதிவிரைவு ரயிலுக்கு இணைப்பு ரயிலாக இருக்கும். இதனால் சென்னைக்கு பகல்நேர விரைவு ரயில் வசதி இல்லாத அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி, திருநெல்லிக்காவல் போன்ற பகுதிகளில் உள்ள ரயில் பயணிகள், மயிலாடுதுறை யில் சோழன் அதிவிரைவு ரயிலில் மாறி, சென்னை எழும்பூர் வரை சென்று விடலாம். தற்போது இந்த ரயில் பாதையில் இயங்கி வரும் தாம்பரம் - செங் கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில் (20683/20684), தாம்பரம் - இராமேஸ் வரம் - தாம்பரம் தினசரி விரைவு பாம்பன் விரைவு ரயில் (16103/16104) அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து தாம்பரம் வரை மட்டுமே செல்கிறது. சென்னை எழும்பூ ருக்கு செல்வதில்லை. எனவே, மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய அனைத்து மயிலாடுதுறை - காரைக்குடி பயணிகள் ரயில்களையும் உடனடியாக இயக்க வேண்டுகிறோம். மயிலாடுதுறையில், சோழன் அதி விரைவு ரயிலுக்கு (22675/22676) இணைப்பு ரயிலாக காரைக்குடி மயிலாடு துறை பயணிகள் ரயிலை (16859/16860) இயக்க வேண்டுகிறோம். மேலும், இந்த ரயில் அனைத்து ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டுகிறோம். இந்த ரயில்களால் மயிலாடுதுறை - திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில் உள்ள ரயில் பயணி கள், மாணவ - மாணவிகள், அலுவ லர்கள் வியாபாரிகள், மூத்த குடிமக்கள், மகளிர் நோயாளிகள், பொதுமக்கள் அதிகளவில் பயன் பெறுவர். ரயில்வே துறைக்கு அதிகளவில் வருமானமும் கிடைக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.