tamilnadu

img

பயிற்சி நிறைவு விழா

தஞ்சாவூர் மே.11-தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி ஆதனூர் தென்னிந்திய திருச்சபை வளாகத்தில் மே 1 முதல் 9-ம் தேதி வரை நடைபெற்ற விடுமுறை கால வேதாகம பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆதனூர் சேகர ஆயர் தா.சார்லஸ் தேவராஜ் தலைமை வகித்தார். சேகர செயலாளர் எஸ்.எம்.ஐ. வில்சன், எஸ்.எம்.ஏ.ஆர்தர், கிராமத் தலைவர் ஐ.மான்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர் வேத.குஞ்சருளன், அருட்தந்தை ச.தமஸ்கு அடிகளார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. நிறைவில் அருட்திரு தா.சார்லஸ் தேவராஜ் நன்றி கூற ஜெபத்துடன் விழா நிறைவுற்றது. முன்னதாக முக்கிய வீதிகளின் வழியாக சாட்சி ஊர்வலம் நடந்தது.