தஞ்சாவூர் மே.17-தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பான் செக்கர்ஸ் பள்ளி மாணவர்கள், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணியின் சார்பில் யோகா மற்றும் சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மு.பழனியப்பன், புகழேந்தி ஆகியோர் யோகாசனப் போட்டியில் முதலிடத்தையும், ருத்ரன், ஜலகண்டேஸ்வரன், ஆர்த்திகா ஆகியோர் இரண்டாமிடத்தையும், ஹரிஹரசுதன், ரித்திக் பாலா ஆகியோர் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.சதுரங்கப் போட்டியில் வருண், அபினாஸ் ஆகியோர் மூன்றாமிடத்தையும் பெற்று பள்ளிக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் பி.ஸ்ரீநாத் ஆகியோரை பள்ளி தாளாளர் மற்றும் முதல்வருமான அருட்சகோதரி ஜெயராணி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.