திருச்சிராப்பள்ளி, மார்ச் 11- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க கைலாசபுரம் கிளை மற்றும் தேனீக்கள் திரைப்பட சங்கம் இணைந்து ‘திருமகள்’ குறு ம்பட வெளியீடு, திரையிடல், பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா பெல் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கவிஞர் துரைராஜ் தலை மை வகித்தார். பெல் பொதுமேலாளர் கமலகண்ணன், தமுஎகச மாநிலத் துணைத் தலைவர் நந்தலாலா, மாவ ட்டச் செயலாளர் ரெங்கராஜன், திராவிட கழக மாநில மகளிரணி அமைப்பாளர் மதிவதனி, முத்தமிழ் மன்ற தலைவர் பார திபாலா, விழா திரைப்பட இயக்கு னர் கயல்மணி, தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவி மோகனாஅம்மா ஆகியோர் வா ழ்த்துரை வழங்கினர். விழாவில் திருச்சி தமிழி கலைக்களத்தின் பறையும் பரத மும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சித்ரா வரவேற்றார். முடி வில் காளிராஜ் நன்றி கூறினார்.