tamilnadu

img

மடிக்கணினி கோரி மாணவர்கள் சாலை மறியல்

பெரம்பலூர், ஜூன் 26- மடிக்கணினி வழங்க கோரி, 2017- 2018-ம் படித்த மாணவர்கள் பெரம்ப லூர் அரசுப் பள்ளியை முற்றுகை யிட்டு புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 2017- 2018-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 1 பயின்ற 380 மாணவ, மாணவி களுக்கு அரசால் வழங்கப்படும் மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே, 2018- 2019-ம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவ, மாணவி களுக்கு வழங்குவதற்காக தமிழக அர சால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 350-க்கும் மேற்பட்ட மடிக்கணினிகள் பெறப் பட்டுள்ளது.  இத்தகவலறிந்த 2017-18-ம் கல்வி யாண்டு மாணவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர் ராஜனை அணுகி, மடிக்கணினி கேட் டுள்ளனர். இதற்கு முறையாக பதில் அளிக்காத தலைமை ஆசிரியர், முதன்மை கல்வி அலுவரிடம் சென்று பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித் துள்ளார். இதனால் மாணவர்கள் மடிக் கணினி வழங்காத தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் விலை யில்லா மடிக்கணினி பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலி யுறுத்தி பெரம்பலூர்-துறையூர் சாலை யில் பள்ளி எதிரே திடீர் சாலை மறிய லில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்த பெரம்ப லூர் போலீசாரும், கல்வித்துறையின ரும் சென்று, மாணவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கை விடப்பட்டது.