பொன்னமராவதி, ஜூன் 15- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் நன்றி அறிவிப்புக் கூட்டம் பொன்னமராவதியில் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் கார்த்தி ப.சிதம்பரத்தை வெற்றி பெற செய்தமைக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் வட்டாரத் தலைவர் செல்வராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்புரையாற்றினார். முன்னாள் அமைச்சர் மற்றும் திருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ரகுபதி, முன்னாள் மாவட்ட தலைவர் தங்க.புஸ்பராஜ், ராம.சுப்புராம், மாவட்ட தலைவர் தர்ம.தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக ஒன்றிய செயலாளர் அ.அடைக்கலமணி, முத்து, வட்டாரத் தலைவர் குமார், காங்கிரஸ் நகர தலைவர் பழனியப்பன், திமுக நகர செயலாளர் அழகப்பன், மதிமுக ஒன்றிய செயலாளர் பழனியாண்டி, விடுதலை சிறுத்தைகள் மாநில பொறுப்பாளர் வெள்ளை நெஞ்சன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் நா.பக்ருதீன், காங்கிரஸ் நிர்வாகிகள் சோலையப்பன் மற்றும் கூட்டனி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.