மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேலூர் தொகுதி வேட்பாளர் ப.கார்த்திகேயனுக்கு வாக்குகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தாலுகா செயலாளர் வி.நாகேந்திரன் தலைமையில் வேலூர் மண்டி தெரு, மெயின் பஜார், சுண்ணாம்பு கார தெரு, பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.ஞானசேகரன், எஸ்.பரசுராமன் மற்றும் கோவிந்தசாமி, முகாசி உள்ளிட்டோர் ஆகியோர் உடனிருந்தனர்.