tamilnadu

img

சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூலை 12- சாலை போக்குவரத்துச் சட்டம் 2017-ஐ அமல்படுத்தக் கூடாது. இன்சூரன்ஸ் கட்டணங்களை உயர்த்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.தர்மலிங்கம் தலைமையேற்றார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், மாவட்ட தலைவர் இரா.மாலதி, துணைத்தலைவர் ஜி.பழனிவேல், துணைச் செயலாளர் எம்.கே.என்.அனிபா, சங்க மாவட்ட செயலாளர் ஏஒன்.மணி, ஆட்டோ ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஏ.நபி, சங்க நிர்வாகிகள் ஜெ.கர்ணன், எஸ்.சீனிவாசன், என்.சேகர், ஜெ.தர்மன், டி.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்க மாவட்ட பொருளாளர் எம்.கே.ஜெய்சங்கர் நன்றி கூறினார்.