தஞ்சாவூர், ஏப்.12-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்தேசியக்குழு உறுப்பினர் நல்லகண்ணு, தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:எட்டு வழிச்சாலை சரியல்ல. அதற்காக எந்தவித அதிகாரமும் இன்றி விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இது, சட்டத்துக்குப் புறம்பானது என்றும், அந்நிலங்களை விவசாயிகளிடம் உடனடியாகக் கொடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கையகப் படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.தமிழ்நாட்டில் இந்தாண்டு மதுவிற்பனை மூலம் 31,742 கோடி வருமானம் கிடைத்தது எனக் கூறப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் 47 சதவீத ஆண்கள் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். மது காரணமாக பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்துள்ளது என நீதிமன்றத் தீர்ப்பில்கூறப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டப் பெண்களின் பெயரை வெளியிட்டதால், நீதிமன்றம்அபராதம் விதித்தது. தேர்தலுக்கு முன்பே இந்த மூன்று வழக்குகளிலும், அதற்கு முன்பு பல வழக்குகளிலும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவேதேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்கவேண்டும் என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரன் கூறியதாவது: இந்திய அரசியலில் மிக மோசமான முன் உதாரணம் ரபேல் வழக்கு.மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் பிரதமர் மீது சுமத்தப்பட் டுள்ள இந்தக் குற்றச்சாட்டு குறித்துஅவர்கள் யாருமே வாய் திறக்கவில்லை. இது அவர்களுடைய நேர்மையற்ற அரசியலைக் காட்டுகிறது. தமிழகத்தில் மிகவும் அருவருக்கத்தக்க அரசியல் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக சோதனை நடத்தப்படுகிறது. இது ஜனநாயக ஏற்புடையதல்ல என்றார்.