கரூர், ஜூன் 12- செவிலியர் பணிகள் அல்லாத, மற்ற பணிகளை செய்ய மருத்துவமனை நிர்வாகம் வற்புறுத்தி வருவதை கண் டித்தும், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர், செவி லியர்களை தரக் குறைவாகவும், தவ றான வார்த்தைகளை பயன்படுத்தி பேசு வதை கண்டித்தும் கடந்த ஜூன் 5ம் தேதி கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து கரூர் கோட்டாட்சி யர் சரவணகுமார் தலைமையில் இரு தரப்பையும் அழைத்து சுமூக பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை முடித்து வைக்கப்பட்டது. பேச்சுவார்த்தை முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை தலைவர், ஊழியர்களை பழிவாங்கும் நோக்கில் அரசு மருத்துவமனையில் மருந்தாளுந ராக பணியாற்றும் அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் எம்.சுப்ர மணியன், தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில துணைத்தலைவர் நல்லம்மாள், மாவட்டத் தலைவர் கார்த்தி, மாவட்டச் செயலாளர் செல்வராணி, மாவட்டப் பொருளாளர் தனலட்சுமி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட் டார். இதனை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட குழு மற்றும் தமிழ் நாடு அரசு நர்சுகள் சங்கம் வன்மை யாக கண்டிப்பதுடன், அனைவர் மீதும் எடுக்கப்பட பணியிடை நீக்க உத்த ரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து ஊழியர் விரோத போக்குடன் செயல்படும் மருத்துவக் கல்லூரி முதல்வரை பணி மாற்றம் செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக செயல்படாமல், உட னடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மருத்துவக் கல்லூரி மருத்து வமனை வளாகத்தில் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் எம்.சுப்ரமணி யன், மாவட்டச் செயலாளர் சக்திவேல், மாவட்டத் தலைவர் மகாவிஷ்ணன், மாவட்டப் பொருளாளர் பொன்ஜெய ராம், செவிலியர் சங்க மாநில துணைத் தலைவர் நல்லம்மாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.