நாகப்பட்டினம், ஏப்.24-நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்தைச் சேர்ந்த திருவிடமருதூர், மணக்குடி, ஆய்மூர், நீர்முளைஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 2017-2018-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை இன்னும்வழங்காமல் இருப்பதை கண்டித்தும், உடனடியாக பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கிடக் கோரியும், நீர்முளைஊராட்சி மன்றம் அருகில், புதன்கிழமை அனைத்து விவசாயிகளின் சார்பில் தொடர் பட்டினிப் போராட்டம் துவங்கியது.6.4.2019 அன்று, திருக்குவளை வட்டாட்சியருடன் விவசாயிகள் நடத்திய பேச்சு வார்த்தையில், மிகவிரைவில் பயிர்க் காப்பீட்டுத் தொகையைப் பெற்றுத்தர ஆவன செய்யப்படும்என்று வட்டாட்சியர் உறுதியளித்தார். ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை.ஓராண்டுக்கு மேலாகியும், விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்காத நியூ இந்தியாஅஷ்யூரன்ஸ் நிறுவனம், அதனைப் பெற்றுத் தர நடவடிக்கைகள் மேற் கொள்ளாத மாவட்ட வருவாய்த்துறை நிர்வாகம், மாவட்ட விவசாயத் துறை நிர்வாகம், மாவட்டக் கூட்டுறவுத் துறைநிர்வாகம் ஆகியவற்றையும், மக்களாட்சி என்னும் பெயரில் விவசாயிகளை வஞ்சித்து ஊழல் செய்வோரையும் கண்டித்து இந்தத் தொடர் பட்டினிப் போராட்டம் நடைபெறுகிறது.பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங் கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் எனவும் விவசாயிகள் கூறினர்.