சீர்காழி ஜூலை 11- நாகை மாவட்டம் கொள்ளிடம் சுற்று வட்டாரப் பகுதி யில் திடீரென காற்றுடன் மழை பெய்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மிதமான மழையும், அதனைத் தொடர்ந்து தூறலும் இருந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கொள்ளிடம் பகுதியில் மழையே இல்லாமல் இருந்தது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களும், கடற்கரையோர கிராமங்களும் வறண்டு காணப்பட்டன. புல் பூண்டு கருகிக் காணப்பட்டது. பல மரங்கள் வாடின. தற்போது திடீரென பெய்த மழை வெப்பத்தை தணிக்கும் வகையிலும், பருத்தி, சோளம் உள்ளிட்ட தோட்டப் பயிர்களுக்கு டானிக் போன்றும் அமைந்திருந்தது. ஆடு, மாடுகள் மேய்வதற்குரிய வயல்கள் கட்டந்தரை யாகி கிடந்தன. ஆனால் இந்த மிதமான மழை புல் பூண்டு வளர்வதற்கும், வாடிக் கொண்டிருக்கும் பல வகையான மரங்க ளும் வளர உதவியது. இந்த மழையினால் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் அனைத்து மக்களும் மகிழ்ச்சியடைந்த னர். மாதத்திற்கு ஒரு முறையாவது நல்ல அதிக மழை பெய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.