tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி போராட்டம்

சீர்காழி, ஜூன் 24- நாகை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதியில் சிதம்ப ரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக் கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து விவசாய சங்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மனிதச் சங்கி லிப் போராட்டம் நடைபெற்றது. கொள்ளிடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்ல சேதுரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத் தில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் படேல், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், விவ சாயிகள், விவசாய தொழிலாளர்கள், வர்த்தகர்கள், பொது மக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.