திருச்சிராப்பள்ளி, ஆக.17- 24.9.2019 அன்று போக்குவரத்துததுறை முதன்மை செயலாளரின் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனே அமுல்படுத்த வேண்டும். 58 மாத கால அக விலைபடி உயர்வு நிலுவையை வழங்க வேண்டும். 2019 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்ற வர்களுக்கு பண பலன்கள் வழங்க வேண்டும். 2019 முதல் பணியிலிருந்து இழந்தவர்க ளுக்கு குடும்ப நல நிதி ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவ ரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் திருச்சி தீரன்நகரில் உள்ள அரசு போ க்குவரத்து பணிமனை முன்பு தமிழக முத ல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு உதவி தலைவர் ராம்குமார் தலை மை வகித்தார். இதில் மாநில துணை பொது ச்செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகி கள் கலந்து கொண்டனர். மணப்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற போராட்ட த்திற்கு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சேகர் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஷாஜகான், வாலிபர் சங்க புறநகர் மாவட்ட தலைவர் பாலு, ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் நவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.