articles

img

அறிவியல் கதிர் - ரமணன்

மருத்துவ சிகிச்சையின் பரிணாம வேர்

 சிம்பன்சிகள் தங்கள் உடல் காயங்களுக்கு, சில தாவரப் பொருட்களை விழுங்குவது, வாயில் கடிப்பது அல்லது உடலில் தடவுவது போன்ற செயல்கள் பல ஆண்டுகளாக கவனிக்கப்பட்டு வரு கின்றன. இந்த தாவரங்கள் வீக்கம் மற்றும் நுண்ணுயிர்  எதிர்ப்பு அல்லது வலி குறைப்பு குணங்கள் கொண்  டவை. இப்போது சிம்பன்சிகள் ஒன்று மற்றொன்றிற்கு  இது போன்ற சிகிச்சை அளிப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அவை சில பூச்சிகளை மற்ற குரங்கின் காயத்தின் மீது தேய்க்கவும் செய்கின்றன. இந்த பூச்சி கள் சீழ்கோப்பு எதிர்ப்புத் தன்மை கொண்டவை.  இது குறித்து விரிவாக ஆய்வு செய்வதற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த குரங்கின (primatologist) ஆய்வாளர் எலோடி பிரேமென் (Elodie Freymann) குழுவினர் 1993 முதல் 2024 வரை உகாண்டாவில் புடாங்கோ காட்டில்  காயங்களுக்கு சிகிச்சை அளித்த ஏழு சிம்பன்சிகளின் விவரங்களை சரிபார்த்தனர். இந்த ஆய்வு, மனிதர்களின் மருத்துவ மற்றும் உடல்நல நடவடிக்கைகளின் பரிணாமத்தின் வேர்களை காட்டுகிறது என்கிறார் பிரேமென்.  இந்த ஆய்வில் காயம்படாத சிம்பன்சி மற்றதன் காயத்தை ஆற்றுவது, நக்குவது, இலையால் தடவுவது,  அரைக்கப்பட்ட தாவரப் பொருளை வைத்து அழுத்து வது ஆகியவை கவனிக்கப்பட்டன. சிகிச்சை அளித்த குரங்கு காயம்பட்ட சிம்பன்சியின் குடும்பத்தை சேர்ந்த தாகவோ அல்லது வேறு குடும்பத்தை சேர்ந்ததாகவோ  இருந்தது. அவை மனிதர்கள்  மாட்டிய பொறியை அகற்ற முயற்சிப்பதும் தெரிந்தது. சிம்பன்சிகள் மற்ற வர்களின் தேவைகள், வலிகள் ஆகியவற்றை புரிந்து கொள்வதும் அவற்றை போக்க நடவடிக்கைகள் எடுப்ப தும் மற்ற இடங்களிலிருந்து கிடைத்த ஆதாரங்களுடன் இவையும் சேர்கின்றன. இதனால் நேரடியான மரபணு  பலன்கள் அவற்றிற்கு இல்லையென்ற போதும் அவை  செய்கின்றன என்கிறார் பிரேமென்.  இந்த ஆய்வு ஃபிரா ண்டியர்ஸ் (‘Frontiers’) என்கிற இதழில் வந்துள்ளது.

பூமியில் கொட்டிக் கிடக்கும் ஹைடிரஜன்  

கார்பன் உமிழ்வை சமனப்படுத்த வேண்டு மென்றால்  ஹைடிரஜன் வாயுவை அதிக  அளவில் எரிபொருளாக பயன்படுத்த வேண்டும். பூமியின் கிரஸ்ட் எனப்படும் மேற்பரப்பில் ஏராளமான அளவு ஹைடிரஜன் உள்ளது என ஒரு ஆய்வு  கூறுகிறது. இவை 170000 ஆண்டுகளுக்கு போதுமான தாக இருக்கலாம். தற்போது ஹைடிரஜனை உண்டாக்க ஹைடிரோகார்பன்களை பயன்படுத்துகிறோம். இது கார்பன்டைஆக்ஸைடு உண்டாக வழிவகுக்கிறது. இனி அது தேவைப்படாது. பூமியின் மேற்பரப்பில் நீரானது இரும்புத்தாது அல்லது கதிரியக்க மூலகங்கள் கொண்ட பாறைகளு டன் வினை புரிந்து ஹைடிரஜன் உருவாகிறது. வெப்பம்,  அழுத்தம் , சரியான நேரம் மற்றும் கட்டுப்படுத்துதல் போன்ற காரணிகளும் தேவை. இப்படிப்பட்ட காரணி களை கணக்கில் எடுத்துக் கொண்டு பூமியில் எங்கு  ஹைடிரஜன் உள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளார் கள். எடுத்துக்காட்டாக மாலியில் ஒரு இடம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஹைடிரஜன் உருவாகுவதற்கு சாதகமான சூழல்களையும் கண்டறிய வேண்டும். எடுத்துக்காட்டாக பூமிக்கடியிலிருக்கும் நுண்ணுயிரி கள் ஹைடிரஜனை உணவாகக் கொள்கின்றன. எனவே  அவை ஹைடிரஜனுடன் இணைவதை தவிர்க்கும் சூழல் முக்கியமானது. அங்குதான் ஹைடிரஜன் லாபகர மான அளவு தங்கியிருக்கும் என்கிறார் டொரோண்டோ  பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியல் விஞ்ஞானி பார்பரா ஷெர்வுட் லாலர். உலகின் உணவுத் தேவையை நிறைவேற்றும் உர  உற்பத்தியிலும் ஹைடிரஜன் மிகவும் அவசியம். அதன்  தேவை  இப்போது 90 மில்லியன் மெட்ரிக் டன்களாக உள்ளது. இன்னும் 25 ஆண்டுகளில் அது 540 டன்களாக  உயரும். ஹைடிரஜனை செயற்கையாக உற்பத்தி செய்வது அதிக செலவு பிடிப்பதோடு கார்பன் உமிழ்வை  அதிகப்படுத்துகிறது. எனவே இயற்கை ஹைடிரஜன் உற்பத்தியே சிறந்தது. ஆனால் அதற்கு இன்னும்  நிறைய ஆய்வுப் பணிகள் செய்ய வேண்டியதிருக்கி றது. இந்த ஆய்வு நேச்சர் ரிவியூஸ் எர்த் மற்றும் என்விரான்மெண்ட் (Nature Reviews Earth & Environment) எனும் இதழில் வந்துள்ளது.

 நல்லவிதமாக  முதுமை அடைவது  

ஒருவர் சீராக முதுமை அடைகிறாரா என்பதை சோதிக்க பல வழிகள் கூறப்படுகின்றன. கையை ஊன்றா மல் தரையிலிருந்து எழ முடியுமா, பல் துலக்கும்போது  ஒரு காலில் எவ்வளவு நேரம் நிற்க முடியும் போன்ற சோதனைகள் முன்வைக்கப்படுகின்றன. நல்லவிதமாக முதுமை அடைவது என்பது உடல்ரீதியானது மட்டு மல்ல உளவியல்ரீதியானதுமாகும். நமது பிடிப்பு எவ்வ ளவு உறுதியாக இருக்கிறது அல்லது எவ்வளவு வேகமாக நடக்கிறோம் என்பது மட்டுமல்ல, நமது அறிதிறன், உணர்ச்சிகள் மற்றும் சமூகத்துடன் இயங்கு வதில் ஏற்படும் மாற்றங்களையும் உள்ளடக்கியதாகும்.  எந்த ஒற்றை சோதனையும் முழு நிலைமையை காட்ட இயலாது. வினாடிக்கு 1.32 மீட்டர் நடப்பது ஆரோக்கியத்தையும் 0.8மீட்டருக்கு குறைவாக நடப்பது  தசைகளின் பலவீனத்தையும் காட்டும். ஆனால் இவற்றை அளவிடும் கருவிகள் வீட்டில் இருக்காது. நாற்காலியிலிருந்து ஐந்து முறை எழுந்து உட்கார எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோம் என்பதை அளவிடும் கருவிகள் வேண்டுமானால் இருக்கலாம். நம்முடைய கவனம், நினைவாற்றல் மற்றும் நெகிழ்  தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய அறிதிறன் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்ய சில சோதனை களை வீட்டிலேயே செய்யலாம்.  இரட்டை பணி சவால்: சாதாரண வேகத்தில் நடந்து  கொண்டே 100இலிருந்து தலைகீழாக மூன்று மூன்றாக  எண்ணுவது. உங்கள் நடை வேகம் குறிப்பிடத்தக்க அளவு மாறுபட்டால் உங்கள் அறிதிறனில் சிரமம் இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம்.  தடம் அறி சோதனை: எண்களையும் எழுத்துகளை யும் இணைத்து (1,அ,2,ஆ,3,இ)வரிசையாக சொல்லுதல்;அதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை கணக்கிடுதல். இரண்டு பணிகளை மாற்றி மாற்றி செய்யும் திறனை இது குறிக்கிறது. ஸ்ட்ரூப் சோதனை(Stroop task): இரண்டு மாறுபட்ட தகவல்கள் முன்வைக்கப்படும் போது, முக்கி யமற்றதை தவிர்க்கும் சோதனை. எடுத்துக்காட்டாக நீலம் என்கிற சொல்லை சிவப்பு வண்ணத்தில் எழுதி  அது என்ன வண்ணம் என்று கேட்கும்போது எழுதப்பட்டி ருக்கும் சொல்லை தவிர்த்துவிட்டு சிவப்பு என்று கூறுவது. இது எளிதாக தோன்றும்.ஆனால் உண்மையில் கடினமானது.   இவற்றை எல்லாம் செய்யும்போது நமது அறி திறன் மேம்படுகிறது என்பதை அறிந்து கொள்வதும் கடினம். சிலவை பயிற்சியினால்கூட மேம்படும். சிலவை  அந்த குறிப்பிட்ட பணிக்கு மட்டுமேயானதாக இருக்க லாம். மேலும் அறிதிறன் மாற்றங்கள் மெதுவாக நிக ழக்கூடியவை. எனவே சீரான கால இடைவெளிகளில் சோதித்து நமது முன்னேற்றத்தை அறிந்து கொள்ள லாம்.  கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது ஒருவர் சீராக  முதுமை அடைகிறாரா என்பது வேகமாக நடப்பதோ அல்லது ஒற்றைக்காலில் நிற்பதோ அல்ல. நாம்  எவ்வாறு உணர்கிறோம்- ஏதாவது ஒன்றில் ஈடுபடு கிறோமா, நிறைவாக உணர்கிறோமா, மற்றவர்களு டன் தொடர்பில் இருக்கிறோமா என்பதே முக்கியம். அதற்கு நேர்மறை,எதிர்மறை அனுபவங்கள் அளவீடு கருவி(Scale of Positive and Negative Experience) போன்றவை உதவலாம். 12 கேள்விகள் கொண்ட இந்த  ஆய்வு தினம் ஒருவர் உணரும் மகிழ்வு, அமைதி,  சோகம் மற்றும் சலிப்பு ஆகியவற்றை பதிவிட்டு நமது உணர்வு ஆரோக்கியம் எவ்வாறு உள்ளது என்பதைக் காட்டுகிறது. ஆகவே உடற்பயிற்சிகளோடு நமது உடல், மனம் மற்றும் மதிப்பீடுகள் ஆகியவற்றையும் அறிந்து சிறிது சிறிதாக அர்த்தமுள்ள மாற்றங்களை செய்வதே உதவி செய்யும். (அபிரிஸ்டவித் பல்க லைக்கழக பேராசிரியர்கள் மார்கோ ஆர்கெஸ்டிஜின் மற்றும் அலெக்ஸ்சாண்டர் நிகெல் வில்லியம் டெய்லர்)