திருப்பூர், மார்ச் 12 - கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி திரு வண்ணாமலையில் நடைபெற்ற தமிழ் நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் 7 ஆவது மாநில பிரதிநித்துவப் பேரவையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானித்தின் அடிப் படையில், கோரிக்கை மனு தபால் அனுப்பும் போராட்டம் வியாழனன்று நடைபெற்றது. திருப்பூர் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தபால் அனுப்பும் இயக்கத்திற்கு கோட்ட தலைவர் என்.சிவக்குமார் தலைமை வகித்தார். முன்னதாக கோட்டச் செய லாளர் ஆர்.ராமன் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார். கோட்டப் பொறி யாளர் அலுவலகத்தில் இல்லாத நிலையில், கோட்டக் கணக்கர் பெரிய சாமியிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் எஸ்.சந்திரன், பி.அம்மாசை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குறிப்பாக, தமிழகத்தில் நெடுஞ் சாலைத் துறை சாலைப் பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்கும் கொள்கை முடிவை அரசு கைவிட வேண்டும், காலியாக உள்ள சாலைப் பணியாளர் இடங்களுக்கு கிராமப்புற இளைஞர்களை வேலைக்கு அமர்்த்திட வேண்டும், 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து பணப்பலன் வழங்க வேண்டும். சாலை பணியாளர்கள் வேலை செய்யும்போது போக்குவரத்து நெருக்கடி, அரிவாள், மண்வெட்டி, கடப்பாறை போன்ற கரு விகளால் ஏற்படும் காயங்கள், விஷப் பூச்சி, பாம்பு கடி மற்றும் வன விலங்கு கள் தாக்குதல் உள்ளிட்ட ஆபத்துகளை சந்திக்கும் நிலையில், சாலைப் பணியா ளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவிகிதம் ஆபத்துப் படி வழங்க வேண்டும். 8 கிலோமீட்டருக்கு இரண்டு பணியாளர் கள் என்ற வரையறைக்கு கூடுதலாக சாலைப் பணியாளர்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணம் செய்து வேலை செய்ய வேண்டிய நிலை உள்ள தால், நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்க ளுக்கு சீருடை, சலவைப்படி வழங்க வேண்டும், மலைப் பாதைகளில் பணிபுரிவோருக்கு மழைக் கோட்டு, கையுறை, கம்பூட்டு உள்ளிட்ட பாது காப்பு உபகரணங்கள் வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த கடிதம் அனுப்பப்பட்டது.